வாலெட் FAQs

 • 1. ஸ்பைஸ் மணி வாலெட் என்றால் என்ன?
  பதில் –ஸ்பைஸ் மணி வாலட், ISO 9001:2008 மற்றும் ISO 27001:2013 சான்றளிக்கப்பட்ட நிறுவனமான ஸ்பைஸ் டிஜிட்டல் லிமிடெடால் வழங்கப்படுகிறது. இது இந்தியாவிற்குள் உடனடி மணி டிரான்ஸ்பர் சேவைகளை அனுமதிக்கிறது. ஸ்பைஸ் மணி என்பது உடனடி மணி டிரான்ஸ்பர் சேவைக்காக ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செமி கிளோஸ்டு PPI வாலட்களில் ஒன்றாகும்.
 • 2.ஸ்பைஸ் மணி வாலட்டை கொண்டு நான் என்ன செய்ய முடியும்?
  பதில் –ஸ்பைஸ் மணி வாலட் மூலம், இறுதி வாடிக்கையாளருக்கான பணத்தை இந்தியா முழுவதும் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடியாக அனுப்பலாம் மற்றும் கமிஷனைப் பெறலாம். மணி டிரான்ஸ்பர் சேவைகளை வழங்க, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஸ்பைஸ் மணி அதிகாரி ஆக வேண்டும். இது தவிர, ஸ்பைஸ் மணி வாலட் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் 24x7 நேரமும் ஸ்பைஸ் மணி வெப்சைட் அல்லது ஆப் மூலம் டிரான்ஸாக்ஷன் செய்யலாம். ஸ்பைஸ் மணி தற்போது 7 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது, அவர்கள் ஸ்பைஸ் மணி மூலம் நன்றாக சம்பாதிக்கின்றனர்.
 • 3. ஸ்பைஸ் மணி வாலெட்டின் நன்மைகள் என்ன?
  பதில்:
   அதிகாரிகளுக்கான நன்மைகள்,
  • (a) ​​அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆகியவற்றை வழங்குவதன் மூலம் யார் வேண்டுமானாலும் ஸ்பைஸ் மணி அதிகாரி ஆகலாம்.
  • (b) இந்தியாவில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் அதிகாரி பணத்தை மாற்றலாம் மற்றும் IMPS மூலம் உடனடியாக வங்கிக் கணக்கில் கடன் பெறலாம். பணத்தை டிரான்ஸ்பர் செய்ய NEFTஐயும் அதிகாரிகள் பயன்படுத்தலாம்.
  • (c) இது மிகவும் சொகரியமானது. இந்தியா முழுவதும் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் ஒரு சென்டருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.50,000/- வரை அதிகாரி மணி டிரான்ஸ்பர் செய்யலாம்.
  • (d)பல அடுக்கு அங்கீகாரத்துடன் கூடிய பாதுகாப்பான செயல்முறை, டிரான்ஸ்பர் செய்யும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.
   வாடிக்கையாளருக்கு நன்மைகள்,
  • (a) சொரியமான இடம் & நேரம். வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்குச் சென்று வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
  • (b) மணி டிரான்ஸ்பர்களுக்கு குறைந்த கட்டணம்.
  • (c) மணி டிரான்ஸ்பர்களுக்கு குறைந்த கட்டணம்.
  • (ஈ) SMS & டிரான்ஸாக்ஷன் வெற்றி பெற்றதற்கான ரெசிப்ட்டுடன் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிளாட்ஃபார்ம் .
  • (e) இது மிகவும் சொகரியமானது. POI & POA ஐ வழங்குவதன் மூலம், நீங்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் மாதம் ரூ.50,000/- வரை டிரான்ஸ்பர் செய்யலாம்.
 • 4. ஸ்பைஸ் மணி வாலெட்டில் நான் எப்படி சைன்அப் செய்வது?
  • பதில் -சைன்அப் செய்து, அங்கீகரிக்கப்பட்ட ஸ்பைஸ் மணி அதிகாரியாக மாற, எங்கள் சைன்அப் பேஜை சென்று பார்க்கவும் - https://www.spicemoney.com/AOB/. கால் பேக் செய்வதற்கு உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் இருப்பிடம் போன்ற விவரங்களை எங்களுக்கு வழங்கவும். எங்கள் வாடிக்கையாளர் சேவை குழு உங்களுக்கு கால் செய்து, ஆன்போர்டிங் செய்ய உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் விவரங்கள் வெரிஃபைட் செய்யப்பட்ட உடன், நீங்கள் SMS மூலம் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை பெறுவீர்கள். எங்கள் மொபைல் ஆப்ஸ் அல்லது வெப்சைட்டில் (https://b2b.spicemoney.com) லாகின் செய்ய, இந்த கிரிடென்ஷியலை பயன்படுத்தி, உங்கள் மணி டிரான்ஸ்பர் பிசினஸில் சம்பாதிக்கத் தொடங்குங்கள்.
 • 5. அங்கீகரிக்கப்பட்ட ஸ்பைஸ் மனி அதிகாரி ஆனதில் எனக்கு என்ன கிடைக்கும்?
  பதில் – அங்கீகரிக்கப்பட்ட ஸ்பைஸ் மணி அதிகாரி ஆனவுடன், பின்வரும் நன்மைகளை பெறுவீர்கள்.
  • (a) ஸ்பைஸ் மணி ஆப்ஸிற்கான டவுண்லோடாபிள் செய்யக்கூடிய லிங்கை பெறுவீர்கள்.
  • (b) உங்கள் பிசினஸ் அளவின் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி சான்றிதழ்கள், போஸ்டர்கள், பேனர்கள், புக்லெட்கள், கிளோ சைன் போர்டுகள் போன்ற பிரத்யேக ஸ்பைஸ் மணி மார்க்கெட்டிங் பொருட்களையும் பெறுவீர்கள்.
  • (c) ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கும் கமிஷன் பெறுவீர்கள்
 • 6. டிரான்ஸாக்ஷனை தொடங்க ஸ்பைஸ் மணி ஆண்ட்ராய்டு ஆப்-ஐ டவுன்லோடு செய்வது எப்படி?
  • பதில் – நீங்கள் பதிவுசெய்யப்பட்ட ஸ்பைஸ் மணி அதிகாரி ஆனவுடன், ஸ்பைஸ் மணி மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்வதாற்கான லிங்கை உங்கள் மொபைலில் பெறுவீர்கள். லிங்கை கிளிக் செய்யவும், டவுன்லோடு தானாகவே தொடங்கும். மேலும், நீங்கள் உங்கள் டெஸ்க்டாப், லேப்டாப் அல்லது ஏதேனும் வயர்டு கணினி மூலம்டிரான்ஸாக்ஷன் செய்ய விரும்பினால், https://b2b.spicemoney.com என்ற வெப்சைட்டிற்கு சென்று உங்கள் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டுடன் லாகின் செய்து, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்து டிரான்ஸாக்ஷனை தொடங்கலாம்.
 • 7. ஸ்பைஸ் மணி எவ்வளவு பாதுகாப்பானது?
  • பதில் – ஸ்பைஸ் மணி என்பது முற்றிலும் பாதுகாப்பான சேவையாகும், இது RBI ஆல் உரிமம் பெற்று அங்கீகரிக்கப்பட்டது. உங்கள் பணத்தின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை. ஸ்பைஸ் மணி வாலெட் ஹை லெவல் என்க்ரிப்ஷனை பயன்படுத்தி பாதுகாக்கப்படுகிறது. எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அணுகலிலிருந்தும் ஸ்பைஸ் மணி வாலெட்டைப் பாதுகாக்க பல அடுக்கு பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பயனர்களின் கோரிக்கைகள் மட்டுமே நெட்வொர்க்கிற்குள் நுழைவதை உறுதிசெய்ய சிறந்த நெட்வொர்க் பாதுகாப்பு செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு அங்கீகரிக்கப்படாத கோரிக்கையும் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கிலேயே நிராகரிக்கப்படும் மற்றும் அனைத்து வாலெட்டும் ஹேக் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. மேலும், அனைத்து டிரான்ஸாக்ஷனும் பயனர் அங்கீகரிக்கப்பட்டவை மற்றும் எந்தவொரு டிரான்ஸாக்ஷனும் செய்ய பயனரிடமிருந்து MPIN வடிவத்தில் வெளிப்படையான ஒப்புதல் பெறப்படுகிறது.
 • 8. ஸ்பைஸ் மணி வாலட் மூலம் நான் செய்த டிரான்ஸாக்ஷன் வெற்றிபெறவில்லை என்றால், எனது பணம் திருப்பி அளிக்கப்படுமா?
  • Ans – ஆம், ஏதேனும் டிரான்ஸாக்ஷன் தோல்வியுற்றால், உங்கள் பணம் உடனடியாக உங்கள் ஸ்பைஸ் மணி வாலெட்டில் ரீபண்ட் செய்யப்படும். இந்தியாவில் உள்ள வங்கிகளுக்குப் பணத்தை டிரான்ஸ்பர் செய்ய IMPS சேவையைப் பயன்படுத்துவதால், வெற்றி மற்றும் தோல்விகள் உடனடியானவை, எனவே உங்கள் பணம் ரியல் டைமில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, தோல்வியுற்றால் உடனடியாகத் ரீபண்ட் செய்யப்படும்.
 • 9. ஸ்பைஸ் மணி வாலெட் வாடிக்கையாளர் சேவையை நான் எவ்வாறு தொடர்பு கொள்வது?
  • பதில் –வெப்சைட், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் எங்களை அணுகலாம்,
  • 1. இணையதளம்: எங்கள் வெப்சைட்டான www.spicemoney.com இல் உள்ள 'எங்களைத் தொடர்புகொள்ளவும்' என்ற பிரிவிற்குச் சென்று, உங்கள் கேள்விகளின் விவரங்களைப் பூர்த்தி செய்து, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
  • 2. மின்னஞ்சல்: உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், கருத்துக்கள் மற்றும் புகார்களை customercare@spicemoney.com க்கு மின்னஞ்சல் செய்யலாம்
  • 3. தொலைபேசி: நீங்கள் எங்கள் வாடிக்கையாளர் சேவை எண்ணான 0120-3986786, 0120-5077786 ஆகிய எண்களை காலை 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம், பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் எங்கள் வாடிக்கையாளர் குறைதீர்ப்புக் கொள்கையை அணுகலாம் @ https://www.spicemoney.com/customer-grievance
 • 10. எனது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது நான் ஏன் ஸ்பைஸ் மணி வாலெட்டைத் திறக்க வேண்டும்?
  • பதில் – உங்கள் கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் அபாயங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு உட்படுகின்றன. முதலில் உங்கள் ஸ்பைஸ் மணி வாலெட்டில் பணத்தை லோடு செய்து, பின்னர் அதை டிரான்ஸாக்ஷனுக்கு பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்து குறைக்கப்படுகிறது.
 • 11. வெளிநாட்டில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு நான் பணத்தை டிரான்ஸ்பர் செய்ய முடியுமா?
  • பதில் – இல்லை. ஸ்பைஸ் மணி வாலெட் இந்தியாவிற்குள் உள்ள வங்கிக் கணக்கிற்கு மட்டுமே பணத்தை டிரான்ஸ்பர் செய்ய அனுமதிக்கிறது. கூடுதலாக, பயனாளியின் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்யலாம்.
 • 12. டிரான்ஸாக்ஷனைச் செய்ய எனது அதிகாரி வாலெட்டை எவ்வாறு லோடு செய்வது?
  • பதில் –நெட்பேங்கிங் மூலம் உங்கள் அதிகாரி வாலெட்டில் நீங்கள் பணத்தை லோடு செய்யலாம். இதை எங்கள் வெப்சைட் https://b2b.spicemoney.com மூலமாகவோ அல்லது ஸ்பைஸ் மணி மொபைல் ஆப் மூலமாகவோ செய்யலாம்.
 • 13. எனது ஸ்பைஸ் மணி வாலெட் அதிகாரியின் லாகின் பாஸ்வேர்டை நான் மறந்துவிட்டால் என்ன செய்வது?
  • பதில் –எங்கள் வெப்சைட்டான https://b2b.spicemoney.com அல்லது எங்களின் மொபைல் ஆப் லாகின் பேஜில் பாஸ்வேர்ட் மறந்துவிட்டது என்ற கிளிக் செய்யலாம். இது உங்கள் அதிகாரி பேஸ்வேர்டை ரீசெட் செய்ய ஒரு OTP ஐ உருவாக்க உங்களை அனுமதிக்கும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ என்டர் செய்து உங்கள் புதிய பேஸ்வேர்டை உருவாக்கவும்